AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
இனி அப்படி கேட்காதீங்க.! கடுப்பில் பொங்கியெழுந்த நடிகை காஜல் அகர்வால்.! அட.. ஏன்? என்னாச்சு??
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விஷால் என பல நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். நடிகை காஜல் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான கெளதம் கிட்ச்லுவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மீண்டும் சினிமாவில் காஜல் அகர்வால்
நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் சமீபத்தில் கண்ணப்பா என்ற படம் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் இந்தியன் 3 படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் ராமாயணா என்ற படம் கைவசம் உள்ளது. சினிமா துறையில் மீண்டும் ஜொலிக்க அவர் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக இருந்து வருகிறார்.

சாதிக்க வயது தடையில்லை
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலிடம், 40 வயதை கடந்து மீண்டும் சினிமாவில் சாதிக்க வந்ததற்கு வாழ்த்துகள்' என்று கூறியுள்ளனர். அதில் டென்ஷனான அவர் ‘40 வயதானால் எல்லாம் முடிந்துவிட்டது என அர்த்தமில்லை. திறமைக்கு வயது தடையாக இருக்காது. இனி அப்படி கேட்காதீர்கள்' என கூறிவிட்டாராம்.
இதையும் படிங்க: கையில் சுருட்டு, கொலைவெறி பார்வை.. மிரள வைக்கும் நடிகை அனுஷ்கா.! வெளிவந்த போஸ்டர்!!
இதையும் படிங்க: என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!