AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
நமக்குன்னு ஒரு தேசம்... கணவருடன் என்ஜாய் செய்யும் ரம்யா பாண்டியன்.! குஷியாக வெளியிட்ட பதிவு!!
தமிழில் டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து அவர் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்களில் நடித்திருந்தார். இப்படங்கள் ரசிகர்களிடையே பெருமளவில் ரீச்சாகவில்லை.இந்நிலையில் அவர் அவ்வப்போது போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து ரம்யா பாண்டியன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதை கவர்ந்தார். பின் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். தொடர்ந்து அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்தது. நடிகை ரம்யா பாண்டியன் யோகா பயிற்சியாளரான லோவல் தவான் என்பவரை காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் கணவருடன் ட்ரிப் சென்றுள்ள புகைப்படங்களை பகிர்ந்து, "நமக்குன்னு ஒரு தேசம் அதில் இருவரும் சேர்ந்து ஒன்றாக வாழ்வோம்" என்று பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: ஜோடி பொருத்தம் சூப்பர்!! கங்கை நதி கரையில் காதலரை கரம்பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்.! வைரல் புகைப்படங்கள்!!
இதையும் படிங்க: முகூர்த்தக்கால் நட்டாச்சு.. நடிகை ரம்யா பாண்டியன் வீட்டில் மீண்டும் விஷேசம்.! வைரல் புகைப்படங்கள்!!