போக்கிரி அசினின் தம்பி இப்போ எப்படி இருக்காரு பார்த்தீர்களா.! ஆள் அடையாளமே தெரியலையே.. வைரலாகும் புகைப்படங்கள்!!
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது சேட்டையால், எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்கள் ஏராளமானோர். அந்த வகையில் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் மாஸ்டர் பரத். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான மை டியர் பூதம் என்ற தொடரில் பாலு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் சிறுவர்கள் மத்தியில் பரீச்சயமானார்.
அசினின் தம்பி
மேலும் சினிமாவில் பல படங்களில் நடித்த இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த போக்கிரி திரைப்படத்தில் அசின் தம்பியாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்தார். அதனை தொடர்ந்து சிம்புவின் சிலம்பாட்டம், தனுசுடன் உத்தமபுத்திரன் போன்ற படங்களில் சிறப்பாக நடித்து பெருமளவில் பிரபலமானார். பரத் தமிழ் மட்டுமின்றி கன்னடம் தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தற்போதைய புகைப்படங்கள்
உடல் எடை பருமனாக இருந்தாலும் அதனை பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் சிறப்பாக நடித்திருந்த அவர் தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இவர் தற்போது தமிழில் பெருமளவில் நடிக்கவில்லை ஆனால் தெலுங்கில் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பவன் கல்யாண் ஆகியோரது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பரத் கடந்த ஆண்டு வெளிவந்த விஸ்வம் என்ற படத்திலும் நடித்துள்ளார். அவரது தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!

இதையும் படிங்க: 90ஸ் கனவுகன்னி நடிகை நக்மாவா இது.! 50 வயதில் எப்படியிருக்கார் பார்த்தீங்களா.! வைரல் புகைப்படம்!!