பிறந்தநாளன்று தல ரசிகர்களுக்கு ஸ்வீட் கிஃப்ட்டா.? ப்ரொடியூசர்க்கு ஷாக் அப்டேட்டா.?!

பிறந்தநாளன்று தல ரசிகர்களுக்கு ஸ்வீட் கிஃப்ட்டா.? ப்ரொடியூசர்க்கு ஷாக் அப்டேட்டா.?!



ajith-fans-are-excited-about-his-birthday-announcement

துணிவு திரைப்படத்தினை தொடர்ந்து தல அஜித் குமாரின் 62 ஆவது படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

ஏகே 62 திரைப்படமானது ஏற்கனவே  விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து  பின்னர் திரைப்படத்தின் கதையில் ஏற்பட்ட குழப்பத்தால் தயாரிப்பு நிறுவனம் அவரை நீக்கிவிட்டு மகிழ் திருமேனியை இயக்குனராக ஒப்பந்தம் செய்தது. இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் அப்டேட்டிற்காக ஜனவரியிலிருந்தே தல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ajith

இந்த திரைப்படத்தைப் பற்றிய புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அஜித் பிறந்தநாள் மற்றும் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அஜித்திற்கு செண்டிமெண்ட்டான மே 4ம் தேதி முதல் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மூன்று கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு  வருகின்ற தீபாவளிக்கு படத்தின் ரிலீஸ் செய்ய முடிவு செய்து இருக்கிறார் அஜித். இதனால் மற்ற தயாரிப்பாளர்களும் நடிகர்களும் கலக்கத்தில் உள்ளனர். ரஜினி விஜய் போன்ற பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள் தீபாவளிக்கு முன்பே வெளியாவதால் நம் படங்களை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என்று காத்திருந்தவர்களுக்கு தல அஜித்தின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்திருக்கிறது.