சினிமா

வெறித்தனமான சைக்கிளிங்! 15 வருஷத்துல தல அஜித் எவ்வளவு தூரம் சென்றுள்ளார் பார்த்தீர்களா!! வியப்பில் ரசிகர்கள்!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உச்சத்த

தமிழ் சினிமாவில் ஏராளமான மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் தல அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்கள் தல அஜித்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் வெறித்தனமாக காத்துள்ளனர். மேலும் அவர்கள் தல அஜித் படங்கள் வெளியாகும் நாட்கள், பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாக்களை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் என பல்வேறு திறமைகளை கொண்டு விளங்குகிறார். அதுமட்டுமின்றி அவர் சமீபத்தில் தனது நண்பர்களுடன் 10,000 கிலோ மீட்டர் பைக் ட்ரிப் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது சைக்கிளிங்கில் மிகுந்த ஆர்வம் காட்டிவரும் அஜித் அவரது நண்பர்களுடன் ஹைதராபாத்தில் சைக்கிளிங் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் இதுகுறித்து அஜித்துடன் சைக்கிளில் சென்ற அவரது நண்பர் கூறுகையில், அஜித்துடன் இந்த 15ஆண்டுகால சைக்கிளில் பயணங்கள் மறக்கமுடியாதவை. பிஸியான ஷூட்டிங்கிற்கு மத்தியிலும் ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு அஜித் சைக்கிளிங் வந்துள்ளார் இதுவரை நாங்கள் 30 ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் சைக்கிளில் பயணித்துள்ளோம் என கூறியுள்ளார். அஜித்தின் இத்தகைய புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.
 


Advertisement