சினிமா

வாரி வழங்கிய நடிகர்கள்..! அஜீத் நம்பர் 1..! லிஸ்ட்டில் வராத ரஜினி மற்றும் விஜய்.! கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்.

Summary:

Ajith and Sivakarthikeyan donates CM fund for corono

நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக பலரும் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கிவருகின்றனர். இந்நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண நிதி வழங்குமாறு தமிழக முதலவர் கேட்டுக்கொண்டதை அடுத்து பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள், பிரபலங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த தொகையை நிதியாக வழங்கினர். இந்நிலையில் கடந்த 7 நாட்களில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

அதில், தல அஜித் 50 லட்சம் வழங்கியுள்ளார் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

இதற்கு முன்னதாக சினிமா துறையை சார்ந்த பெப்சி தொழிலார்களுக்கு ரஜினி 50 லட்சம் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement