சினிமா

என்னது.. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரகசியமா கல்யாணமாகிருச்சா! தீயாய் பரவிய புகைப்படம்! என்னதான் நடந்தது??

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இளம் நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இளம் நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஹீரோயினாக மட்டுமின்றி அம்மா, தங்கை, அக்கா என எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அசத்தலாக நடித்து அனைவரையும்  ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பார்.

அதிலும் கிராமத்து பெண்ணாக அவரது நடிப்பு வேற லெவல். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்த காக்கா முட்டை, கனா, தர்மதுரை, க/பெ ரணசிங்கம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் ராகுல் ரவீந்திரனுடன் திருமணகோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இதனைக் கண்ட  ரசிகர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு ரகசியமாக திருமணம் நடந்துருச்சா என சந்தேகமடைந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்த உண்மை பின்னணி தற்போது கசிந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கண்ணன் இயக்கத்தில் , தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அப்படத்தில் அவர் திருமணமான பெண்ணாக நடிக்கிறார். அப்படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ்க்கும், ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணம் நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இத்தகைய புகைப்படங்களே இணையத்தில் வைரலாகியுள்ளது.


Advertisement