உலக அழகி உடை, தலையில் கிரீடத்துடன் தரையில் அமர்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா ராய்.! வைரலாகும் புகைப்படம்..! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

உலக அழகி உடை, தலையில் கிரீடத்துடன் தரையில் அமர்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா ராய்.! வைரலாகும் புகைப்படம்..!

உலக அழகி பட்டத்துடன் நடிகை ஐஸ்வர்யா ராய் தரையில் அமர்ந்து உணவருந்தும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கடந்த 1994 ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் வெற்றிபெற்று உலக அழகி பட்டத்தை கைப்பற்றினார் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் வென்றபிறகு உலகளவில் பிரபலமான இவர் பல்வேறு திரைப்படங்கள், விளம்பர படங்களில்  நடிக்க தொடங்கினார்.

குறிப்பாக தமிழில் இவர் நடித்த ஜீன்ஸ், இராவணன், எந்திரன் போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவிலும் பிரபலமாக்கியது. தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கிவரும் வரலாற்று சிறப்புமிக்க பொன்னியின் செல்வன் படத்திலும் ஐஸ்வர்யா நடித்துவருகிறார். சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அபிஷேக் பச்சானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டத்தை வென்றபிறகு அந்த உடை மற்றும் உலக அழகி என்ற கிரீடத்தையும் தலையில் அணிந்தவாறு தரையில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம்  ஒன்று  தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo