சினிமா

அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் என்ன ஆனார்? அவரின் அடுத்த படம் என்ன தெரியுமா?

Summary:

Adhithi balan in new maliyalam movie

சினிமாவை பொறுத்தவரை ஒருசிலர் ஓரிரு படங்களிலையே பிரபலமாகிவிடுவார்கள். அந்த வகையில் அருவி படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது.

இந்நிலையில் அருவி படத்தை அடுத்து படத்தின் நாயகி அதிதி பாலனுக்கு பல்வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் படத்தின் கதை ஒத்துவராததால் எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார்.

இவர் என்ன ஆனார்? எந்த படத்தில் நடித்துவருகிறார் என எதுவும் தெரியாமல் இருந்த இவரது ரசிகர்களுக்கு தற்போது ஒரு இன்ப செய்தி வெளியாகியுள்ளது. மலையாளத்தில் புது படம் ஒன்றில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகை அதிதி பாலன். தமிழில் சென்னையில் ஒரு நாள் படத்தை இயக்கிய ஷாகித் காதர் இந்த படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் முதலில் நித்யா மேனன்தான் நடிக்க இருந்தாராம், ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த வாய்ப்பு தற்போது அதிதி பாலனுக்கு சென்றுள்ளதாம்.


Advertisement