நடுக்கடலில் திருமணம்.! திருமண உறவிலிருந்து வெளியேறும் திரெளபதி நடிகை!!

நடுக்கடலில் திருமணம்.! திருமண உறவிலிருந்து வெளியேறும் திரெளபதி நடிகை!!


actrss-sheela-rajkumar-divorce-her-husband

தமிழில் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆறாது சினம். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இப்படத்தை தொடர்ந்து அவர் டூலெட், மண்டேலா, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்தார். இவரது எதார்த்தமான நடிப்பு அனைவரையும் பெருமளவில் கவர்ந்து பிரபலமானார்.

மேலும் ஷீலா ராஜ்குமார் தமிழ் மட்டுமின்றி மலையாளத்தில் வெளியான கும்பலங்கி நைட்ஸ் என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். நடிகை ஷீலா ராஜ்குமார் கடந்த 2017 ஆம் ஆண்டு தம்பி சோழன் என்பவரை காதலித்து, இருவீட்டாரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் கடலுக்கு நடுவே வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் தற்போது நடிகை ஷீலா திருமண உறவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், நான் திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன். நன்றியும், அன்பும் என பதிவிட்டுள்ளார். காதல் ஜோடி திடீரென விவாகரத்து செய்ய என்ன காரணம்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.