சினிமா

பிக்பாஸ் பற்றி சினிமா பிரபலங்கள் கருத்துக்கள்...!

Summary:

actresses-twit-about-biggboss2


பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனையும் நடிகர் கமல்காசனே தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இதில் சீசன்1 நிகழ்ச்சியை  நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். இந்த  நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய வெற்றியுடன்  நிறைவடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் சீசன்2 வையும் நடிகர் கமலஹாசனே தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சி தற்சமயம் நிறைவடைந்துள்ளது...

பிக்பாஸ் சீசன்1 ன் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட  பிக் பாஸ் சீசன் 2 நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இதன் வெற்றியாளராக ரித்விகா தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 பற்றி சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பிரபல சினிமா நடிகை கஸ்தூரி கூறுகையில், அவர் 3 எபிஸோடு பார்த்ததாகவும், அதை பார்த்த உடனே ரித்விகா வெற்றி பெறுவார் என்றும் நினைத்தாகவும் கூறியுள்ளார்.

மேலும் மற்றொரு பிரபலம் நடிகை காஜல் அவர்கள் கூறுகையில் "பிக்பாஸ் நல்லவங்கல கைவிடல” என கூறியுள்ளார்.


Advertisement