அடிக்குற வெயிலுக்கு இப்படி ஒரு டிரஸ் தேவையா!! யாஷிகாவின் கருப்பு உடை கலக்கல் புகைப்படம்...



actress-yashika-annand-latest-photo-J9PLKE

கருப்பு உடையில் கலக்கல் போஸ் கொடுத்த நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அட்லட் காமெடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆஹா ஓஹோ என பிரபலமாகிவிட்டார் யாஷிகா. இந்த படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ் சினிமாவில் பெரிய இடத்தை பிடித்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

yashika

பிக்பாஸ் நிகழ்ச்சியும் யாஷிகாவை பெரியளவில் பிரபலமாக்கியது. போட்டியின் இறுதிவரை சென்று இவர் பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்த்தநிலையில் போட்டியின் இறுதி கட்டத்தில் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு ஏமாற்றமளித்தார். தற்போது சினிமா, சீரியல், மாடலிங் என கலக்கிவருகிறார் யாஷிகா.

மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர பிசியாக இருந்துவரும் இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது கருப்பு உடையில் கலக்கல் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.