சினிமா

பிரபல தமிழ் நடிகைக்கு திடீர் திருமணம்!! வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்..

Summary:

பிரபல நடிகை யாமி கவுதமிற்கு இன்று திடீர் திருமணம் நடைபெற்றநிலையில் அவரது திருமண புகைப்படம்

பிரபல நடிகை யாமி கவுதமிற்கு இன்று திடீர் திருமணம் நடைபெற்றநிலையில் அவரது திருமண புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாமி கவுதம். முதல் படத்தை அடுத்து இருக்கு தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வராததால் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு படவாய்ப்புகள் குவிய தொடங்கியது.

டோடல் சியப்பா என்ற ஹிந்தி படத்தில் நடித்தன் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமான அவர், பின்னர் 2019-ம் ஆண்டு வெளியான URI - தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் படத்தில் நடித்தார். இந்த படம் இவருக்கு பெரிய புகழை தேடி தந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ஆதித்யா தர் - யாமி கவுதம் இருவருக்கும் காதல் உருவானது. அதனைத் தொடர்ந்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் இன்று (ஜூன் 4) திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா காரணமாக இவர்களது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றநிலையில், தங்களது திருமண புகைப்படத்தை யாமி கவுதம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது பலரும் புதுமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.


Advertisement