கின்னஸ் சாதனை படைத்த, பிரபல நடிகை மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

கின்னஸ் சாதனை படைத்த, பிரபல நடிகை மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!



actress-vijaya-nirmala-dead

தமிழ் சினிமாவில் மச்சரேகை என்ற திரைப்படத்தில் குழந்தை  கதாபாத்திரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் விஜய நிர்மலா. இதனை தொடர்ந்து அவர் எங்க வீட்டுபெண், பணமா பாசமா, என் அண்ணன், ஞான ஒளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

vijaya nirmala

இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் 44 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கிய விஜய நிர்மலா கடந்த 2002ஆம் ஆண்டு உலக கின்னஸ் சாதனை பட்டியலில் இடம்பெற்றார்.

vijaya nirmala

இந்நிலையில் 73 வயது நிறைந்த விஜயநிர்மலா, சமீப காலமாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த  நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.