சினிமா

நடிகை வித்யுலேகாவிற்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு..! மாப்பிள்ளை யார் தெரியுமா.? வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்.!

Summary:

Actress Vidyullekha Engagement photos goes viral

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகைகளில் ஒருவரான வித்யுலேகா ராமன் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்ட நிலையில் அழகி ஜோடியின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

பிரபல தமிழ் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான மோகன்ராம் அவரின் மகள் நடிகை வித்யூலேகா ராமன். கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். 

நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடிகை சமந்தாவுக்கு தோழியாக, நகைச்சுவை நடிகையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து  பல்வேறு படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கி சட்டை, மாஸ் என பல படங்களில் மாஸ் காட்டி உள்ளார் நடிகை வித்யூலேகா.

சற்று குண்டான தோற்றம் உடைய அவர் சமீபத்தில் தனது உடல் எடையை குறைத்து மிகவும் கவர்ச்சியான உடையணிந்து சமூக வலைதளங்களில் சில புகைப்படங்களை பதிவிட்டநிலையில் அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.  

இந்நிலையில் இவருக்கும் பிட்னஸ் மற்றும் நியூட்ரிஷியன் எக்ஸ்பெர்ட் சஞ்சய் என்பவருக்கும் கடந்த 26ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தற்போது அந்தப் புகைப்படங்களை தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement