அடேங்கப்பா.. கொழுக் மொழுக்கென இருந்த நடிகை வித்யூ லேகாவா இது!! எடை குறைந்து போலீஸ் உடையில் செம கெத்து காட்டுறாரே!!



actress vidyu lekha latest photo viral

தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வித்யூலேகா. இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகள் ஆவார். இப்படத்தைத் தொடர்ந்து வித்யூலேகா தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

உடல் எடை அதிகரித்து பப்ளியான தோற்றத்தில் இருக்கும் அவர் தனது காமெடியான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தார். அதனை தொடர்ந்து சில ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த அவர் பின்னர் தனது தீராத முயற்சியால்  உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இந்நிலையில் வித்யுலேகாவிற்கு ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனை தொடர்ந்தும் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் வித்யூலேகா போலீஸ் உடையில் கெத்தாக இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.