நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மிக்கு திடீர் திருமண ஏற்பாடு..! மாப்பிளை யார் தெரியுமா..? தீயாக பரவிய தகவல்..!
நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மிக்கு திடீர் திருமண ஏற்பாடு..! மாப்பிளை யார் தெரியுமா..? தீயாக பரவிய தகவல்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். போடா போடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அவதாரம் எடுத்த இவர் இன்று கதாபாத்திருக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார்.
இதனிடையே நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலித்துவருவதாக பல்வேறு செய்திகள் வெளியானது. இந்நிலையில்தான் விஷால் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக கூறி நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. தற்போது வரலக்ஷ்மி வேறொரு நபரை காதலித்துப்பதாகவும் விரைவில் அவருடன் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் தீயாக பரவியது.
குறிப்பிட்ட நபர் இந்திய கிரிக்கெட் அணியுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றும், தோனி , விராட்கோலி போன்றோருக்கு நெருங்கிய நண்பர் எனவும், பெரிய தொழிலதிபர் எனவும் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து வரலக்ஷ்மி தரப்பில் எந்த ஒரு பதிலும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அது வெறும் வதந்தி என்றும், தற்போது தான் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை எனவும் வரலக்ஷ்மி பதில் கூறியுள்ளார்.
Why am i the last to know that I'm getting married..??Hahahah the same nonsense rumors..why is everybody obsessed with me getting married..if I'm getting married I will shout it off the roof tops..to all u media ppl writing abt this..IM NOT GETTING MARRIED. IM NOT QUITTING FILMS pic.twitter.com/VimowM2pMR
— 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓 (@varusarath) May 18, 2020