மீண்டும் ராணா - த்ரிஷா காதல் ஜோடி இணையவுள்ளது...!



actress-trisha-movie-join-with-rana

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை த்ரிஷா தமிழில் நடிக்க வந்து தற்போது 18 வருடங்கள் ஆகியுள்ளது. இன்றும்  முன்னணி ஹீரோயினியாக நடித்து வருகிறார். இவர் நடிகர் கமல், விஜய், அஜித், விக்ரம், ஜெயம் ரவி, சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும், ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

அந்த வகையில் நடிகர் ராணாவுடன் நடிகை திரிஷாவிற்கு காதல் இருந்ததாக முன்பு காலத்தில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த காதல் கைகூடவில்லை என்பதும் அது வீண் வதந்தியாக கூட இருக்கலாமா எனவும் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் இவருக்கு இருவரும் ஜோடிசேர்ந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இந்தப் படம் தமிழில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ராணா விருப்பம் தெரிவித்துள்ளாராம். தெலுங்கில் ஹீரோயினியாக நடிகை தரிஷாவே நடிக்கவுள்ளாராம். இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.