த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
அடச்சே.. இப்படியா செய்றது?.. கவர்ச்சி உடையில் மகாலெட்சுமி நெக்லஸ் போட்ட நடிகை டாப்ஸி..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
ஹிந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்த ஒருவர் டாப்ஸி. இவர் தமிழில் ஆரம்பம், ஆடுகளம், காஞ்சனா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அத்துடன் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் அந்தளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில் தற்போது மும்பை ஃபேஷன் நிகழ்ச்சியில் இவர் கவர்ச்சியான ஆடையில், கழுத்தில் மகாலட்சுமி உருவம் பொறித்த நெக்லஸ் அணிந்துகொண்டு கலந்து கொண்டிருந்தார். இதனை கண்ட நெட்டிசன்கள் எப்படி கவர்ச்சி உடையில் மகாலெட்சுமி நெக்லஸை அணியலாம் என்று பொங்குகின்றனர்.
மேலும் இது தொடர்பான விவாதங்கள் தற்போது இணையதளத்தில் நடந்து வருகின்றன. அத்துடன் அடச்சே.. இவர் தனது மூளையை கழட்டி வீட்டில் வைத்துவிட்டாரா? என்றும், ஆயிரம்தான் நடிகையாக இருந்தாலும் ஒரு அளவுதான் என்றும் கொந்தளித்து வருகின்றனர்.