சினிமா

கேரவனுக்குள் நடிகை தமன்னாவிற்கு காத்திருந்த உச்சகட்ட இன்ப அதிர்ச்சி! அவரது ரியாக்சனை பார்த்தீர்களா!

Summary:

நடிகை தமன்னா கேரவனுக்குள் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து  முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கல்லூரி, படிக்காதவன், பையா,வீரம், சிறுத்தை, தில்லாலங்கடி,சுறா, தேவி, பாகுபலி என பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

நடிகை தமன்னா விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.  அதுமட்டுமின்றி தற்போது வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்புக்கு சென்ற நிலையிலேயே அவர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். 

அழகு சிலையான நடிகை தமன்னா இன்று தனக்கு பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் அவரது குழுவினர் அவருக்கே தெரியாமல் கேரவனுக்குள் டெக்கரேட் செய்து பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதனை கண்டதும் நடிகை தமன்னா செம ஷாக்காகியுள்ளார். இந்த வீடியோவை அவர் மிகவும் உற்சாகத்துடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.


Advertisement