பாண்டிய நாட்டு பாடகிக்கு., நான் வீழ்வேனென்று நினைத்தாயோ? பாணியில் அசத்தல் சம்பவம்.!actress-swagatha-s-krishnan-latest-instagram-picture

நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என்று பன்முக திறமையை கொண்ட இளம் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன். இவர் மறைந்த எஸ்.பி.பி போன்றோருடன் பல்வேறு பாடல்கள் பாடியுள்ளார். மதுரையில் பிறந்த பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன், பின்னாளில் குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பாடல் மற்றும் கவிதைகளை பாடி வரவேற்பு பெற்ற பாடகி, பல்வேறு தமிழ் படங்களில் பின்னணி பாடகியாக குரல் கொடுத்துள்ளார். சில படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்வாகதா கிருஷ்ணன், அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. கூடுதலாக தனது எடை குறைப்பு மற்றும் அதற்கான காரணம் தொடர்பாக நடிகை தகவலை பகிர்ந்துள்ளார்.

Actress Swagatha

இதுகுறித்து அவரின் இன்ஸ்டா பதிவில், "எனது வாழ்க்கையில் நேர்ந்த அனுபவம், என் வாழ்க்கையை புதிதாக தொடங்க வழிவகை செய்தது. எனக்கு சுய அன்பு தேவை என்பதை உணர்ந்து, என் மீது கவனத்தை செலுத்தினேன். என்னை மேம்படுத்த, மனம் மற்றும் உடலை பொருத்தமாக வைத்திருக்க, உலகை மீண்டும் கைப்பற்ற வலிமை கிடைக்க, முன்னெப்போதும் இல்லாத அளவு கடுமையாக உழைத்தேன். அதுவே எனது வாழ்க்கையை புதிதாக உருவாக்கும்.

எந்த விஷயமும் எளிதில் கிடைத்துவிடாது. நான் கடினமாக உழைத்தேன். நான் இழந்த ஒவ்வொரு கிலோவும் எனது உடலை விட்டு கொழுப்பு மட்டும் வெளியேறாமல், என் மீதான அவதூறு விமர்சனமும் வெளியேறியது. அதனை நான் உணர்ந்தேன். எனது ஆன்மா சுத்தப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தான் அமைதி உணர்வு ஏற்பட்டு குணமடைந்தேன். எனது வாழ்க்கையில் முக்கிய தருணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.