கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
முகமெல்லாம் வீங்கி நடிகை சுருதிஹாசன் வெளியிட்ட போட்டோ.. பதறிப்போன ரசிகர்கள்... காரணம் இதுதானாம்.!

காய்ச்சலால் தனது முகம் வீங்கிவிட்டது என பிரபல தமிழ் நடிகை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரையுலகில் உன்னைப்போல் ஒருவன், 7 ம் அறிவு, 3, புலி போன்ற படங்களில் நடித்த நடிகை சுருதி ஹாசன். இவர் நடிகர் கமல் ஹாசனின் மகள் ஆவார். ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகி, தமிழ் மக்களுக்கு நன்கு பரிட்சயமானவர் சுருதி ஹாசன்.
கடந்த 2016ம் ஆண்டுக்கு பின்னர் நடிகை சுருதி ஹாசன் பெரும்பாலான படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்ட நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து சிலர் நடித்து வருகிறார். தனக்கு காய்ச்சல் காரணமாக முகமெல்லாம் வீங்கி இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தனது மேக்கப் இல்லாத புகைப்படத்தை வெளியீடு செய்த நடிகை சுருதி ஹாசன் தனக்கு காய்ச்சல், மாதவிடாய் போன்ற பல காரணத்தால் முகமெல்லாம் வீங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.