நான் சீன்லாம் போடமாட்டன்., குழந்தைகளுக்கு என்னோட டிஎன்ஏ இருக்கணும்னு அவசியமில்லை - பிரபல நடிகை பளீச் பேட்டி..!!

நான் சீன்லாம் போடமாட்டன்., குழந்தைகளுக்கு என்னோட டிஎன்ஏ இருக்கணும்னு அவசியமில்லை - பிரபல நடிகை பளீச் பேட்டி..!!


actress-sunny-leone-says-kids-dna

 

சென்னையில் நடைபெற்ற ஓ மை கோஸ்ட் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சன்னி லியோன் கலந்துகொண்டார். இப்படத்தில் நடித்த யோகிபாபு, தர்ஷா குப்தா, சதீஷ், ஜி.பி.முத்து உட்பட பலரும் அங்கிருந்தனர். மேலும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் என திரையுலக பட்டாளமே அங்கு கூடியிருந்தது. 

இந்த நிகழ்ச்சியை விஜே அர்ஜனா, ஆர்.ஜே.விஜய் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்தனர். தமிழ் பெண்ணாக பட்டுசேலை கட்டிக்கொண்டு வந்த சன்னிலியோனுக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. இதில் சென்னைக்கு வருகை தந்த சன்னி லியோனிடம் விஜே பார்வதி கேள்விகேட்ட நிலையில், அதற்கு சன்னி அதிரடியாக பதிலளித்தார். 

actress sunnyleone

அதில் மாதவிடாய், வாடகை தாய் விவகாரம் உட்பட பல ஹாட் கேள்விகளும் இருந்தன. கேள்விகளுக்கு சன்னிலியோன் பதில் கூறுகையில், "மாதவிடாய் நாட்களில் நான் அதிகம் சீன் போடமாட்டேன். எனக்காக செட்டில் 100 பேர் வேலை செய்ய வேண்டும் என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் மாத்திரை எடுத்துக்கொண்டு எனது வேலையை பார்க்க புறப்பட்டு சென்றுவிடுவேன். 

செய்யும் தொழிலே தெய்வம் என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் என்று கூறினார். மேலும், குழந்தைகளைப் பொறுத்தவரையில் எனது குழந்தைகளுக்கு எனது டி.என்.ஏ இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குழந்தைகளை அன்புடன் பார்த்து வளர்த்தாலே போதுமானது" என்று தெரிவித்தார்.