BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அடுத்ததாக எந்த சீரியலில் நடிக்கப் போகிறார்.? வெளியானது புதிய அப்டேட்.!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்தில், தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் சுஜிதா. அண்ணன், தம்பி ஒற்றுமை, கூட்டுக்குடும்பம் என்ற விதத்தில், அந்த நெடுந்தொடரின் கதைக்களம் அமைந்திருந்தது. அந்தத் தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்திற்கு கணக்கச்சிதமாக பொருந்தியிருந்தார் சுஜிதா.
சில வாரங்களுக்கு முன்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம் முடிவடைந்தது. தற்போது இந்த தொடரின் 2வது பாகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் முதல் பாகத்தில் நடித்த சரவணன் விக்ரம் உள்ளிட்ட பலர் தங்களுடைய அடுத்த ப்ராஜெக்ட்டில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இதில் சரவண விக்ரம் தற்போது பிக்பாஸ் வீட்டிலிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தான், சுஜிதா தற்போது தெலுங்கு தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தமிழில் எந்த தொடரிலும் இவர் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது இவர் தமிழில் ஒரு புதிய நெடுந்தொடரில் நடித்து வருவதாக தெரிய வந்திருக்கிறது. புயலுக்கு முன் நடந்த சூட்டிங் எனக் குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை சுஜிதா. அதாவது சென்னை மாநகர பேருந்தில் இந்த படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் காரணமாக, தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறீர்களா என்று ரசிகர்கள் அவரை கேள்வியெழுப்பி வருகிறார்கள்.