சினிமா

ப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது! மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பத்தை மையமாகக்கொண்டு, குடும்ப தொடர

விஜய் தொலைக்காட்சியில் அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பத்தை மையமாகக்கொண்டு, குடும்ப தொடராக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அதில் தனது கணவரின் தம்பிகளை அம்மாவைப் போல  பார்த்துக்கொள்ளும் பாசக்கார அண்ணியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் கூட நடிகை சுஜிதாவிற்கு விருது அளிக்கப்பட்டது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சினிமாக்களிலும், சின்னத்திரையிலும் செமையாக கலக்கி வரும் சுஜிதாவிற்கு  திருமணமாகி நன்கு வளர்ந்த ஒரு மகன் உள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் அவர் தற்போது குடும்பத்தோடு மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நிலையில் அதனைக் கண்ட நெட்டிசன்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணியா இது? என ஷாக்காகியுள்ளனர்.


Advertisement