சினிமா

வாவ்.. கியூட்டான குடும்பம்! நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தோட கணவர் இவர்தானா? நீங்க பார்த்துருக்கீங்களா!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஏராளமான தொடர்கள் ஒளிபரப்ப

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வாறு அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக்கொண்டு, குடும்ப தொடராக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா, குமரன், காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அவ்வாறு  பாண்டியன் ஸ்டோர் தொடரில்  தனது கணவரின் தம்பிகளை அம்மாவைப் போல  பார்த்துக்கொள்ளும் அண்ணியாக தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் சினிமாக்களிலும், சின்னத்திரையிலும் கலக்கி வரும் சுஜிதாவிற்கு திருமணமாகி நன்கு வளர்ந்த ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் சுஜிதா தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ்குகளை பெற்று வருகிறது.


Advertisement