பீஸ்ட் பட பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்.! சோகத்தில் திரைப்பிரபலங்கள் இரங்கல்!!

பீஸ்ட் பட பிரபல பழம்பெரும் நடிகை காலமானார்.! சோகத்தில் திரைப்பிரபலங்கள் இரங்கல்!!


actress-subbulakshmi-passed-away

கேரளாவில் பிறந்தவர் சுப்பலட்சுமி. இவர் அகில இந்திய வானொலியில் பணியாற்றிய முதல் பெண் இசைக்கலைஞர் என்ற சாதனையை படைத்தவர். திரையுலகில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய அவர் தன் 66வது வயதில் பிருத்விராஜ் நடிப்பில் வெளிவந்த நந்தனம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

 பின்னர் ராப்பகல், சிஐடி மூசா, கல்யாணராமன் பாண்டிய படா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்த அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை சுப்பலட்சுமி தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை, அம்மணி மற்றும் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஏராளமான விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

subbalakshmi

இந்நிலையில் 87 வயது நிறைந்த அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று மாலை காலமாகியுள்ளார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து  வருகின்றனர்.