இந்தியா சினிமா

அர்ஜுனுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் புகார்.. விரைவில் நல்ல செய்தி?.!

Summary:

அர்ஜுனுக்கு எதிராக நடிகை கொடுத்த பாலியல் புகார்.. விரைவில் நல்ல செய்தி?.!

நடிகர் அர்ஜுனின் நடிப்பில் வெளியான நிபுணன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுருதி ஹரிஹரன். தமிழில் நிபுணன் என்ற பெயரில் வெளியான திரைப்படம், கன்னட மொழியில் விஸ்மயா என்ற பெயரில் வெளியானது. நிபுணன் படத்தின் படப்பிடிப்பு நடக்கையில் அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சுருதி புகார் தெரிவித்து, பெங்களூர் கப்பண்பார்க் காவல் நிலையத்தில் கடந்த 2018 ஆம் வருடம் புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகர் அர்ஜுன் நடிகை சுருதி ஹரிஹரனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான சாட்சி மற்றும் ஆதாரம் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. இதனால் இறுதி அறிக்கையை தயார் செய்த காவல் துறையினர், அர்ஜுன் குற்றமற்றவர் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதற்கான அறிக்கையையும் தாக்கல் செய்தனர்.

காவல் துறையினர் தாக்கல் செய்த அறிக்கைக்கு எதிர்ப்பு விரும்பினால், சம்பந்தப்பட்ட நடிகை சுருதி ஹரிஹரன் நீதிமன்றத்தில் ஆட்செப்பனை தெரிவிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், நடிகை சுருதி ஹரிஹரன் காவல் துறையினரின் அறிக்கைக்கு எதிராக ஆட்சேபனை தெரிவித்து மனுதாக்கல் செய்யவில்லை.

மேலும், நீதிமன்ற விசாரணைக்கும் ஆஜராகாத நிலையில், நடிகையின் பாலியல் புகாரில் சிக்கியுள்ள அர்ஜுன் குற்றமற்றவர் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். காவல் துறையினரின் அறிக்கையையும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், வழக்கில் இருந்து விரைவில் அர்ஜுன் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement