ரஜினியுடன் நடித்த புகழ்பெற்ற நடிகை கைது செய்யப்பட்டாரா! வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

ரஜினியுடன் நடித்த புகழ்பெற்ற நடிகை கைது செய்யப்பட்டாரா! வைரலாகும் வீடியோவால் பரபரப்பு


Actress sonakshi sinha arrested or not

தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்த சோனாக்சி சின்ஹாவை கையில் விலங்கு போட்டு கைது செய்வது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பாலிவுட் திரைத்துறையின் புகழ்பெற்ற நடிகைகளில் ஒருவர் சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜினியுடன் லிங்கா படத்தில் நடித்துள்ளார். 

sonakshi sinha

மேடையில் நடனம் ஆடும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த வருடம் ரூ.24 லட்சம் பணம் பெற்றதாகவும்,  ஆனால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த மாதம் ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சோனாக்சி வால்மீகி சமூகத்தை சேர்ந்தவர்களை பற்றி தவறாக பேசியதாக சர்ச்சையில் சிக்கினார். அதன் பிறகு ட்விட்டரில் மன்னிப்பு கேட்டார். 

இந்நிலையில் இன்று அவரது கையில் விலங்கை மாட்டி கைது செய்வது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உண்மையில் சோனாக்சி சின்ஹா கைதுசெய்யப்பட்டாரா அல்லது ஏதாவது படத்தின் சூட்டிங் காட்சியா என்பது தெரியவில்லை.