
actress sold ticket in theatre
பாலிவுட் சினிமாவில் லஷ்மன் உதேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லுக்கா சுப்பி. இப்படத்தில் கார்த்திக் ஆர்யன், க்ரிட்டி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் மார்ச் 1ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகவும் படத்தின் விளம்பரத்திற்காகவும் லுக்கா சுப்பி படத்தின் நடிகை கிரிட்டி சனோன் தியேட்டருக்கு சென்று டிக்கெட் விற்பனை செய்துள்ளார்.
நடிகை க்ரிட்டி சனோன் மும்பையில் உள்ள பிவிஆர் தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்யும் கவுண்டரில் நின்று படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளார்.
படம் பார்க்க சென்ற நிலையில் கவுண்டரில் பாலிவுட் நடிகை க்ரிட்டி டிக்கெட் விற்பதை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் க்ரிட்டி சனோன் தியேட்டரில் தான் டிக்கெட் விற்பனை செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement