குறுக்கே வந்தவரை ஓங்கி அடித்த பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.?

குறுக்கே வந்தவரை ஓங்கி அடித்த பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.?


Actress slapped some unknown person

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை லட்சுமி மஞ்சு. இவர் நடிகையாக மட்டுமல்லாமல், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் உள்ளார். சில ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் லட்சுமி மஞ்சு.

bollywood

தனது நான்காம் வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய லட்சுமி மஞ்சு, 2011ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் "கடல்" படத்தில் துணை நடிகையாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழில் காற்றின் மொழி, 36 வயதினிலே என்ற சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் லட்சுமி மஞ்சு. தென்னிந்திய திரைப்பட விருதுகள், நந்தி விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் என்று பல விருதுகளை வென்றுள்ளார்.

bollywood

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில், லட்சுமி மஞ்சு செய்தியாளர்களிடம் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது சிலர் குறுக்காக நடந்து சென்றதால் கடுப்பான லட்சுமி மஞ்சு அவர்களை அடிக்கச் சென்றார். இச்சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.