நிஜமாகவே உங்களுக்கு 43 வயதாகி விட்டதா சிம்ரன்..? சிம்ரன் பதிவிட்ட வீடியோவை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்.!

நிஜமாகவே உங்களுக்கு 43 வயதாகி விட்டதா சிம்ரன்..? சிம்ரன் பதிவிட்ட வீடியோவை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்.!


Actress simran latest video goes viral

பிரபுதேவா நடித்த VIP திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். VIP படத்தை அடுத்து ஒன்ஸ் மோர், நேருக்கு நேர் என தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கியது. விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார் சிம்ரன்.

இடுப்பழகி சிம்ரன் என இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்த இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சற்று ஒதுங்கி இருந்த சிம்ரன் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

simran

கடந்த ஆண்டு ரஜினிக்கு ஜோடியாக நடித்த பேட்ட படம் மூலம் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுத்தார் சிம்ரன். தற்போது அடுத்தடுத்த படங்களில் பயங்கர பிசியாக இருக்கும் இவர், காதலர் தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

தற்போது அந்த வீடியோ வெளியாகி செம வைரலாகியுள்ளது. வீடியோ வெளியான முதல் நாளிலையே 13 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும், அந்த வீடீயோவை பார்க்கும் ரசிகர்கள் நிஜமகாவே உங்களுக்கு 43 வயசு ஆகிடுச்சா சிம்ரன் என கமெண்ட் செய்துவருகின்றனர். அந்த அளவிற்கு இளமையாக உள்ளார் நடிகை சிம்ரன்.