சினிமா

25 வயசுதான் ஆகுகு! அழகும், அனுபவமும் இருந்தும் தற்கொலை மனநிலைக்கு சென்ற பிரபல நடிகை! ஏன் தெரியுமா?

Summary:

கொரோனா சமயத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணக்கஷ்டம் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றதாக 25 வயதே ஆகும் பிரபல நடிகை கூறியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா சமயத்தில் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் பணக்கஷ்டம் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்றதாக 25 வயதே ஆகும் பிரபல நடிகை கூறியுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பீமா, ரேணிகுண்டா, நாளை நமதே, எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளவர் நடிகை சனுஷா. ஒருசில படங்களே நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் ரேணிகுண்டா நடிகை என்று சொன்னால் தெரியும் அளவிற்கு சற்று பிரபலமானவர்.

அதேபோல் அலெக்ஸ்பாண்டியன் படத்தில் சந்தானத்தின் தங்கையாக மூன்று சகோதரிகளில் ஒருவராக இவரும் கலக்கி இருப்பார். இப்படி சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் இவர் தற்கொலை செய்துகொள்ள துணிந்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கொரோனாவின் தொடக்க காலத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், சொந்த வாழ்க்கையிலும் தொழில் ரீதியாகவும் பிரச்னைகள் ஏற்பட்டன, இதனால் ஏற்பட்ட மனஅழுத்ததில் தான் தற்கொலை செய்துகொள்ள எண்ணியதாகவும், ஆனால் தன் மீது மிகவும் பாசம் வைத்துள்ள தனது தம்பியை பற்றி யோசித்ததால் தற்கொலை எண்ணத்தை கைவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

அதன்பிறகு மனநல மருத்துவர்களை சந்தித்த ஆலோசனை பெற்றபிறகு, மனதில் இருந்த குழப்பங்கள் விலகி, தற்போது நலமுடன் இருந்தாக கூறியுள்ளார். மேலும், யாரேனும் மனஅழுத்ததில் இருந்தால் அவர்கள் கட்டாயம் மருத்துவர்களை அணுகி முறையான சிகிச்சை பெறவேண்டும் எனவும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.


Advertisement