உடல் மெலிந்து தோற்றத்தில் காணப்பட்ட தனுஷ் படம் நடிகை.! இவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் வருத்தம்..

கேரளாவைச் சேர்த்த நடிகை சரண்யா மோகன், விஜயின் காதலுக்கு மரியாதை உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். மேலும், வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைபடத்தில் கதாநாயகியாக தனது சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இதன்பின் வேலாயுதம், யாரடி நீ மோகினி போன்ற படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். சினிமாவில் உச்சத்திலிருக்கும் போதே இவருக்கும் அரவிந்த் கிருஷ்ணன் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணமானது.
இந்க தம்பதியர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்குப் பின்னர், உடல் எடை அதிகரித்து சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் பழையபடி உடல் இளைத்திருக்கிறார். இதற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆரோக்கியமான உணவு, வெந்நீர் என தொடர்ந்து டயட்டில் இருக்கிறார். தினமும் ஒரு மணிநேரம் பரதநாட்டிய பயிற்சியுடன், யோகா, நடைப்பயிற்சியும் மேற்கொண்டிருக்கிறார். மேலும், 3 மாதங்களுக்கு ஜிம் சென்று பயிற்சி செய்துள்ளார். மேலும் சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சரண்யா.