சினிமா

விஜய் டீவியின் புது பிரம்மாண்ட சீரியலில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகை! யார் தெரியுமா?

Summary:

Actress santhini current status

சாந்தனு பாக்யராஜ் நடித்த சித்து ப்ளஸ் 2 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. சித்து ப்ளஸ் 2 படத்தை அடுத்து நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துவந்தார் சாந்தினி.

17 வயதாகும் போது, 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை அழகிப்போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட இவர் அந்த போட்டியில் பரிசு பெறவில்லை என்றாலும் மிகவும் பிரபலமானார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் அதன்பின்னர்தான் சித்து ப்ளஸ் 2 படத்தில் அறிமுகமானார்.

தற்போது படங்களில் பெரிதாக வாய்ப்பு இல்லாத நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் 16 போட்டியாளர்களின் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை.

இந்நிலையில் பிக்பாஸ் போனால் என்ன நான் விஜய் டீவிக்குத்தான் வருவேன் என்பதுபோல விஜய் தொலைகாட்சியில் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் தாழம்பூ என்ற பாம்பு தொடரில் நடிக்க உள்ளார். தாழம்பூ தொடரின் புது ப்ரோமோ ஓன்று தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement