சண்டையில் கிணற்றில் விழுந்த காளைகளை மீட்கச்சென்று துயரம்; 3 பேர் பரிதாப பலி.!



Rajasthan 3 Died well Poison Gas Attack 

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷ்ஹபுரா மாவட்டம், ஆர்ணி கிராமத்தில் நேற்று இரவு இரண்டு காளைகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதனையடுத்து, காளையின் உரிமையாளர் தனது கிராமத்தை சேர்ந்த நபர் உதவியுடன் அதனை மீட்க முயற்சி செய்துள்ளார். 

சண்டையில் கிணற்றுக்குள் விழுந்த காளைகள்:

அச்சமயம், புல்டோஸர் உதவியுடன் காளை ஒன்று பத்திரமாக மீட்கப்பட, இரண்டாவது காளையை மீட்கும் பணி நடந்தது. அப்பணியில் இருந்த சுக்தேவ் என்பவர் மயங்கி கிணற்றுக்குள் விழுந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தனராஜ் என்பவர், சுக்தேவை மீட்க கிணற்றுக்குள் சென்று அவரும் மயங்கினார். 

விஷவாயு தாக்கி மயக்கம்:

அடுத்தடுத்து இவர்களை மீட்க பதறியபடி கமலேஷ் மற்றும் சங்கர் என்ற நபர்களும் கிணற்றுக்குள் சென்றனர். அங்கு இவர்கள் விஷவாயுவால் தாக்கப்பட்ட, கிராம மக்கள் இவர்களை ஒருவழியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேர் பரிதாப பலி:

அங்கு தனராஜ் (வயது 26), கமலேஷ் (வயது 19), சங்கர் (வயது 30) ஆகியோரின் இறப்பு உறுதி செய்யப்பட்டது. சுக்தேவ் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.