"விஜய் எனக்கு அண்ணன்" உருக்கமாக பதிவிட்ட நடிகை சங்கீதா..Actress sangeetha openup about vijay

1998ம் ஆண்டு "காதலே நிம்மதி" படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சங்கீதா. தொடர்ந்து உதவிக்கு வரலாமா, பகவத் சிங், கெஸ்ட் ஹவுஸ், அன்புள்ள காதலுக்கு, டபுள்ஸ், கபடி கபடி, பிதாமகன், உயிர், காசு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

vijay

90களின் பிற்பகுதியில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பரந்த இவர், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வராத காரணத்தால் பாடகர் கிரீஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில், சமீபத்தில் விஜயின் வாரிசு படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியொன்றில் சங்கீதா, "விஜய் எனக்கு அண்ணன். என்னை பற்றி எதாவது சர்ச்சை எழுந்தால் முதலில் கேட்பவர் அவர் தான்.

vijay

என் திருமண வாழ்க்கையில் மிகுந்த அக்கறை கொண்டவர் விஜய். என் காதல் விஷயத்தை முதலில் விஜயிடம் தான் பகிர்ந்தேன்" என்று சங்கீதா கூறியிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.