சினிமா

முதல் முறையாக வெளியான நடிகை சங்கீதாவின் அழகிய மகள் புகைப்படம்! இதோ!

Summary:

Actress sangeetha daughter photo

ஒருசில மலையாள படங்களை தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு நடிகர் நெப்போலியன் நடித்த பகவத்சிங் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சங்கீதா. அதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். விக்ரம், சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார் சங்கீதா. இந்நிலையில் நடிகை சங்கீதாவும், பிரபல பின்னணி பாடகர் க்ரிஷும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

பாடகர் க்ரிஷ் முதல் முறையாக கமல் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படம் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். மேலும், அழகிய அசுரா, சிங்கம் 3 முப்பரிமாணம் போன்ற படங்களில் சிறு சிறு வேடத்தில் நடித்துள்ளார். தற்போது பிரபல தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் சிறுவர்கள் பங்கேரும் சன் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார் க்ரிஷ்.

கிரிஷ் மற்றும் சங்கீதா இருவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கழித்து இந்த திருமணமாகி ஷிவியா என்ற பெண் குழந்தையும் பிறந்தார். நீண்ட வருடத்திற்குப் பின்னர் நடிகர் க்ரிஷ் தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement