வித்தியாசமான உடையில் போட்டோசூட் செய்த சமந்தா.. ரசித்து கமெண்ட் செய்து வரும் நெட்டிசன்கள்.!actress-samantha-viral-photoshoots

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார்.

samantha

மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் விஜய் தேவர் கொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் குஷி.

இப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின்பு திரை துறையில் இருந்து ஓய்வெடுக்க போவதாக சமந்தா அறிவித்திருந்தார். மேலும் மயோஸைடிஸ் என்னும் நோய்க்கான சிகிச்சையை எடுத்து வருகிறார் சமந்தா.

samantha

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது டெனிம் உடையில் வித்தியாசமாக போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் இவரை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.