காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
அதிர வைத்த சமந்தா! அசர வைத்த கீர்த்தி சுரேஷ்! என்ன நடந்தது தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா. என்னதான் சக நடிகையாக இருந்தாலும் நடிகைகளுக்குள்ளும் போட்டி பொறாமை வருவது வழக்கம்தான்.
ஆனால் தன்னை அசர வைத்த நடிகை கீர்த்தி சுரேஷ்தான் என மனதார பாராட்டியிருக்கிறார் நடிகை சமந்தா.
சிவகார்த்திகேயன், சமந்தா நடிப்பில் வெளியான சீமராஜா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் தனி ஒரு நடிகையாக நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்தான் யு டர்ன்.
நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷ் வேடத்தில் நடித்து இருக்கலாம் என்று தோன்றியதா? என சமந்தாவிடம் கேட்டதற்கு ‘கீர்த்தி சுரேசுக்கு ‘நடிகையர் திலகம்’ படம் மூலமாக ஒரு நல்ல வாய்ப்பு வந்தது. அதை நன்கு பயன்படுத்திக்கொண்ட அவர், தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைப் பற்றி பேச வைத்தார். அசர வைத்தார். உரிய வாய்ப்புகள் வந்தால், எல்லோரும் தங்கள் திறமையை நிரூபிப்பார்கள். நானும் அதுபோன்ற வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்’ என்றார்