சினிமா

விஜய், அஜித்தை பார்த்து இப்டி கேட்டுட்டீங்களே சமந்தா! அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

Summary:

Actress samantha talks about actor vijay and ajith

தமிழில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகை சமந்தா.

அதை தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என தமிழின் அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ள இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடிக்கும் சமந்தா சீமராஜா, யுடர்ன் என்ற இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. அதோடு, சமந்தாவின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்களும் வெளியாகி உள்ளன. அதனால் உற்சாகத்தில இருக்கும் சமந்தா, டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில், விஜய், அஜித் நீங்கள் கேட்க விரும்புவது என்ன என்று கேட்டனர்.

அதற்கு சமந்தா, விஜய்யிடம் எப்படி இளமையாக இருக்கிறீர்கள் என்றும், அஜித்திடம், என் கணவர் உட்பட பலருக்கும் உங்களை பிடிக்க காரணம் என்ன, என்ன மாயம் செய்தீர்கள் என கேட்க நினைப்பதாக கூறினார்.


Advertisement