வைரலாகும் சமந்தாவின் பதிவு.! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.!?Actress samantha instagram post

சமந்தாவின் திரை பயணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்து வந்தார். தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தனக்கென தனி இடத்தை தமிழ் திரை துறையில் நிலைநாட்டி பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

samantha

​​​​​​

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டனர். இதன் பிறகு இவருக்கு மயோசைடிஸ்ட் எனும் நோய் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டதால் திரைத்துறையில் இருந்து சிறிது பிரேக் எடுத்துக் கொள்வதாக அறிவித்திருந்தார்.

இதையும் படிங்க: "இயக்குனர்கள் அந்த விஷயத்தை சொல்லத் தயங்குகிறார்கள்" நடிகை பார்வதி ஆதங்கம்.!?

நோயிலிருந்து மீண்ட சமந்தா

இதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் விளம்பரங்களிலும், சமூக வலைத்தளங்களில் மட்டுமே பிசியாக இருந்து வந்த சமந்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புகைப்படங்கள் மற்றும் அவர் எடுத்துக் கொண்டு வரும் சிகிச்சைகளை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வந்தார். தற்போது சமந்தா தனது சிகிச்சை குறித்து பதிவு வெளியிட்டு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

samantha

இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி

மேலும் இது குறித்து சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியதாவது, "நான் இந்த சிகிச்சை முறையால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த சிகிச்சையில் மனம் மற்றும் உடல் இரண்டிற்கும் அமைதி ஏற்படுகிறது. இவ்வாறு கூறியிருப்பதோடு, இந்த தரப்பியால் ஏற்படும் நன்மைகளை குறித்தும், விளக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் மயோசைட்டிஸ் நோய் பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டதாக சமந்தா வெளியிட்ட இப்பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் உங்களை திரையில் காண ஆர்வமாக இருக்கிறோம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தனியாக சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா.. குழந்தைகள் எங்கே.? ரசிகர்கள் கேள்வி.!?