தனியாக சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா.. குழந்தைகள் எங்கே.? ரசிகர்கள் கேள்வி.!?Nayanthara and Vignesh shivan Instagram post

நயன்தாராவின் திரைப்பயணம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நயன்தாரா. இவர் தனது நடிப்பு திறமையின் மூலம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எனும் பெயர் பெற்று தமிழ் திரை உலகில் ஜொலித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் முதன் முதலில் ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

nayanthara

இதன் பின்பு தொடர்ந்து தமிழில் பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். இவ்வாறு தொடர்ந்து தமிழில் பிசியான நடிகையாக இருந்து வந்த நயன்தாரா, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரை கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: ஆன்மீக பயணம்... கணவருடன் கோயில் கோயிலாக நடிகை நயன்தாரா தரிசனம்.!

காதலில் விழுந்த நயன்தாரா

இது போன்ற நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்தார். இதன் பின்னர் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். பின்பு வாடகை தாய் முறை மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. திரைத்துறையில் மட்டுமல்லாது, தொழிலதிபராகவும் தொடர்ந்து ஜொலித்து வருகிறார் நயன்தாரா.

nayanthara

ஹாங்காங் சுற்றுலா

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் நயன்தாரா, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் ஹாங்காங் நாட்டிற்கு சுற்றுலா சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் குழந்தைகள் எங்கே என்று கேட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அச்ச்சோ.. எவ்ளோ கியூட்.! மத்தளமான தலை.! மகன்களுடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா.! வீடியோ...