"இயக்குனர்கள் அந்த விஷயத்தை சொல்லத் தயங்குகிறார்கள்" நடிகை பார்வதி ஆதங்கம்.!?Actress parvathy openup about directors approaching

மலையாள நடிகை பார்வதி

மலையாளத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பூ, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், சென்னையில் ஒரு நாள், உத்தமவில்லன், மரியான், பெங்களூர் நாட்கள் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

Paarvathi

பத்திரிக்கையாளர் சந்திப்பில் பார்வதி

இவ்வாறு பிரபலமான நடிகையாக இருந்து வரும் பார்வதி திருவோத்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்பேட்டியில், "என்னிடம் அதிகமாக புது முக இயக்குனர்கள் கதை கூற வருவார்கள். அவர்கள் நீங்கள்தான் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் என்று கூறுவார்கள். ஆனால் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் கதை என்று கூறப்போவதில்லை" என்று என்னிடம் கூறுவார்கள்.

இதையும் படிங்க: தனியாக சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா.. குழந்தைகள் எங்கே.? ரசிகர்கள் கேள்வி.!?

Paarvathi

ஆதங்கத்தை வெளிப்படுத்திய பார்வதி

இது குறித்து தொடர்ந்து பேசிய பார்வதி, "பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் சினிமா என்று கூறுவதற்கு ஏன் அவர்கள் தயங்குகிறார்கள். இவ்வாறான தயக்கத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. தயாரிப்பாளர்கள் இப்படியான படங்களை தயாரிக்க விரும்புவது இல்லையா? என்னைப் பொறுத்தவரை பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் தான் அதிகமாக நடித்து வருகிறேன்" என்று வெளிப்படையாக ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: ஸ்ருதிஹாசனிற்கு என்ன ஆச்சு.! இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!?