ஸ்ருதிஹாசனிற்கு என்ன ஆச்சு.! இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்.!?Fans shocking about Shruthi hasan instagram post

ஸ்ருதிஹாசனின் திரைப்பயணம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ் மட்டுமல்லது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகையாகவும், பாடகியாகவும் திரை பயணத்தை ஆரம்பித்த ஸ்ருதிஹாசன் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார் சுருதிஹாசன்.

Instagram

குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் 

கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தினால் சிறுவயதில் இருந்து தனது தந்தை கமல்ஹாசனின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இதனை அடுத்து முதன் முதலில் கதாநாயகியாக 2011 ஆம் வருடம் ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரும் வெற்றியடைந்தது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தார்.

இதையும் படிங்க: கவர்ச்சி ரொம்ப தூக்கலா இருக்கே.?! தர்ஷா குப்தாவின் தரமான கிளாமர் கிளிக்ஸ்.!

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் இசையமைத்து பாடிய இனிமேல் என்ற ஆல்பம் பாடல் இணையத்தில் வைரல் ஆனது. இப்பாடல் கமலஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்து வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிலையில் ஸ்ருதிஹாசன் சாந்தனு என்பவரை காதலித்து வந்தார். விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்று ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.

Instagram

இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் குழப்பம்

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவான நடிகையாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை வெளியிட்டு வருவார், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என் கதவுகளை மூடிவிட்டேன். சாவியை தொலைத்துவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார். இப்பதிவை பார்த்து ரசிகர்கள் ஸ்ருதிஹாசன் சோகத்தில் உள்ளாரா என்று வருத்தத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகை ரம்யா பாண்டியனின் வேற லெவல் வைரலாகும் போட்டோ சூட்.! வாயை பிளக்கும் ரசிகர்கள்.!?