சினிமா

நடிகை சமந்தா தளபதியையும், தல அஜித்தையும் பார்த்து நான் இந்த கேள்வியை கண்டிப்பாக கேட்டே தீருவேன் என்று கூறியுள்ளார்! ஏன் தெரியுமா?

Summary:

Actress Samantha Commander and Tala Ajith said that I will definitely ask this question! Why do you know

தற்போது இந்திய திரையுலகில் திருமணம் ஆன நடிகைகளுக்கு மீண்டும் சினிமா வாய்ப்பு அதிகம் கிடைக்காது என்று மக்கள் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் திறமை மட்டும் இருந்தா போதும் கண்டிப்பாக திருமணத்திற்கு பின்பு ஜொலிக்கலாம் என்பதை நடிகை சமந்தா நிரூபித்து வருகிறார்.

நடிகை சமந்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான u turn என்னும் படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. நடிகை சமந்தா இதன் கொண்டாட்டத்தில் நிறைய புரொமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அந்த வகையில் நடிகை சமந்தா ஒரு புரொமோஷன் நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தாவை பார்த்து நீங்கள் பிரபல நடிகரான அஜித்- விஜய்யிடம் ஒரு கேள்வி கேட்க சொன்னால் என்ன கேள்வி கேட்க நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு நடிகை சமந்தா இளைய தளபதி விஜய்யிடம், கடந்த 15 வருடங்களில் நீங்கள் நாளுக்கு நாள் இளைமையாகி கொண்டே வருகிறீர்கள் அந்த சீக்ரெட் என்ன என்று கேட்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் தல அஜித்திடம் நடிகை சமந்தா உங்களை பிரபலங்கள் மட்டும் அல்லாது மக்களும் அதிகம் பிடித்தவர் என்று என்னுடைய கணவர் உள்பட கூறுகிறார்கள் அதில் என்ன சீக்ரெட் உள்ளது என்று அவரிடம் கேட்பேன் என்று கூறியுள்ளார்.


Advertisement