அம்மாடியோவ்.. சமந்தா அணிந்திருக்கும் இந்த ஒரு உடையின் விலை இவ்வளவா?? வாயடைத்துப் போன நெட்டிசன்கள்!!Actress samantha 1 jacket blouse rate

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில்  ஏராளமான படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சமந்தா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்த ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் செம ட்ரெண்டானது.

சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சூப்பர் ஜோடியாக வலம் வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சமந்தா படங்கள், சுற்றுலா செல்வது என பிஸியாக உள்ளார். அண்மையில் அவர் ஸ்விட்சர்லாந்தில் பனிசறுக்கி விளையாடிய வீடியோவை இணையத்தில் பகிர்ந்திருந்தார். மேலும் அங்கு சமந்தா தனது பயிற்சியாளருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் Moncler என்ற விலையுர்ந்த Jacket அணிந்து இருந்தார். அந்த ஒரு Jacket-ன் விலை ரூ.1,21,012 இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் ஒரு jacket விலை இவ்வளவா என ஆச்சரியம் அடைந்துள்ளனர். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.