சினிமா

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ரோஜா! ஏன் என்னாச்சு? அவரது கணவர் வெளியிட்ட ஷாக் தகவல்!!

Summary:

தமிழ் சினிமாவில் வெளிவந்த செம்பருத்தி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிக

தமிழ் சினிமாவில் வெளிவந்த செம்பருத்தி படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரோஜா. அதனை தொடர்ந்து அவர் பலமுன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்தார்.

இந்நிலையில்  நடிகை ரோஜா ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பின்னர் அரசியலில் களமிறங்கிய அவர் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இந்நிலையில் நடிகை ரோஜா திடீரென தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இதனால் ரசிகர்கள் பெரும் பதற்றம் அடைந்தனர். இதுகுறித்து  நடிகை ரோஜாவின் கணவர் கூறுகையில்,  தற்போது நடிகை ரோஜா நன்றாக உள்ளார். அவருக்கு இரு பெரிய அறுவை சிகிச்சைகள் முடிவடைந்து அவர் குணமடைந்து வருகிறார்.

ஜனவரி மாதம் செய்யவேண்டிய அறுவை சிகிச்சை. தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தார். அதனால் பாதிப்பு அதிகமாகிவிட்டது. ஆனால் இறைவன் அருளால், அனைவரது பிரார்த்தனையால் நல்லபடியாக ஆபரேஷன் முடிந்துவிட்டது. இன்னும் 2 வாரங்கள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தயவு செய்து யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement