"துருவ நட்சத்திரம் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படுமா?! குழப்பத்தில் ரசிகர்கள்..
அந்த ஒருநாள் இரவு நடிகை ரியாமிகா எங்கே இருந்தார்! தற்கொலையில் தொடரும் மர்மங்கள்
அந்த ஒருநாள் இரவு நடிகை ரியாமிகா எங்கே இருந்தார்! தற்கொலையில் தொடரும் மர்மங்கள்

நடிகை ரியாமிகாவின் தற்கொலை வழக்கில் அவரது காதலர் ரமேஷ் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய தகவல் இந்த வழக்கில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
X-வீடியோஸ், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த ரியாமிகா சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் 28ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் நடிகையின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகை ரியாமிகா அந்த வீட்டில் தனது உறவுக்கார சகோதரர்களுடன் தங்கியிருந்ததாகவும் அவரது காதலர் தினேஷ் அடிக்கடி அங்கு வந்து செல்வதுமாக இருந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. அவர் X-வீடியோஸ் படத்தில் மிகவும் கவர்ச்சியாய் நடித்ததை பலரும் கேலி செய்ததால் தான் தற்கொலை செய்துகொண்டார் என வதந்திகளும் பரவின.
இந்நிலையில் நடிகையின் காதலன் தினேஷ் கொடுத்துள்ள வாக்குமூலம் காவல்துறையினரின் விசாரணையை வேறு திசையில் திருப்பி உள்ளது.
ரியாமிகா தற்கொலை செய்வதற்கு முந்தைய நாள் தினேஷ் அவரை செல்போனில் தொடர்பு கொண்டதாகவும், அவர் அப்போது வீட்டில் இல்லை என்று தெரிவித்ததாகவும் கூறியுள்ளார் தினேஷ். அவர் அன்று இரவு முழுவதும் எங்கே தங்கி இருந்தார் என்பதே தெரியவில்லை என்று கூறும் தினேஷ், வீட்டுக்கு திரும்பிவிடுமாறு, தான் தொலைபேசியில் கூறிய போது, எல்லாம் எனக்கு தெரியும் என்று ரியாமிகா தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.
அந்த ஒரு நாள் இரவு முழுவதும் ரியாமிகா எங்கே இருந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. ஒருவேளை அதனை கண்டுபிடித்தால் அவரது தற்கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம் என்ற முனைப்புடன் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.