BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
"இறுதி சுற்று பட நடிகை ரித்திகா சிங்கின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!"
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்திப் படங்களில் நடித்து வருபவர் ரித்திகா சிங். இவர் 2002ம் ஆண்டு வெளியான "டார்ஜான் கி பேட்டி" என்ற ஹிந்திப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் ஒரு தற்காப்புக்கு கலைஞரும், குத்துச் சண்டை வீரரும் ஆவார்.

2009ஆம் ஆண்டு ஆசிய உள்ளரங்கு போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய ரித்திகா சிங், சுதா கொங்கரா இயக்கத்தில், மாதவனுடன் "இறுதிச் சுற்று" படத்தில் அறிமுகமானார். முதல் படமே ரித்திகாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இதையடுத்து இவர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது "தலைவர் 170" படத்தில் நடித்து வரும் ரித்திகா, இன்று தனது 29வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி படத்தில் நடிப்பதற்கு ரித்திகா 1கோடி வரை சம்பளமாகப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வெகு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ரித்திகாவிற்கு 8கோடி ரூபாய் அளவில் சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.